கஜோலுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் சோனாக்சி சின்ஹா

கஜோலின் ''மா'' படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து சோனாக்சி சின்ஹா மனம் திறந்து பேசினார்.;

Update:2025-06-25 11:04 IST

சென்னை,

கஜோலின் 'மா' படத்துடன் தனது 'நிகிதா ராய்' படம் வெளியாவது பெருமையாக இருப்பதாக சோனாக்சி சின்ஹா கூறினார்.

'நிகிதா ராய்' படம், மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான கஜோலின் ''மா'' படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து சோனாக்சி சின்ஹா மனம் திறந்து பேசினார்.

இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோத இருந்தாலும், அதை போட்டியாகப் பார்க்கவில்லை, பெருமையாக நினைப்பதாக சோனாக்சி கூறினார்.

மேலும் அவர், ''இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய படம் வெளிவருகிறது, மற்றொரு படத்துடன் மோதுகிறது. அது திரைத்துறை வாழ்க்கையில் ஒரு பகுதி" என்றார்.

சோனாக்சி சின்ஹா நடிக்கும் 'நிகிதா ராய்' மற்றும் கஜோல் நடிக்கும் 'மா' ஆகிய படங்கள் வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்