ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பட அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விரைவில் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விரைவில் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர். இந்த மல்டிஸ்டாரர் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தெரியவில்லை என்றாலும், எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவின் போது, ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படம் குறித்து பேசினார். "கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் அப்பா (ரஜினி) நடிக்கப் போகிறார். சரியான நேரத்தில் அப்பாவே அவற்றை வெளியிடுவார்" என்றார்.
மேலும், சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதி ஹாசன், “ அவர்களை ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று நாங்களும் ஆசை படுகிறோம். எல்லோரையும் போலவே அந்த படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம் ” என்றார்.