'ரூ.300 கோடி செலவு பண்ணி...அதுதான் பெரிய படம்' - நடிகர் சாம்ஸ்
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி';
சென்னை,
ரூ.20 கோடி செலவு பண்ணி எடுக்கப்பட்ட படம் ரூ. 80 கோடி வசூலித்தால் அதுதான் பெரிய படம் என்று நடிகர் சாம்ஸ் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இப்படத்தில் காளி கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், சாம்ஸ், ஷெலி மற்றும் விஷ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது நடிகர் சாம்ஸ் பேசுகையில்,
'சின்ன படம், பெரிய படம் எது என்பதை தீர்மானிப்பது மக்கள்தான். ரூ.300 கோடி செலவில் ஒரு படம் எடுத்து, அது ரூ. 302 கோடி வசூலித்தால் பெரிய படம் கிடையாது. ரூ.20 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இப்படம் தற்போது ரூ.80 கோடி வசூலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதுதான் பெரிய படம். மக்களால் கொண்டாடப்படும் படம்தான் பெரிய படம்' என்றார்.