பேஷன் ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்த சன்னி லியோன், மலைக்கா அரோரா
மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் மினு மினுக்கும் ஆடையில் சன்னி லியோன் போஸ் கொடுத்து அசத்தினார்.;
மும்பையில் பிரபல வடிவமைப்பாளர் வடிவமைத்த ஆடைகளின் அறிமுக விழா நடந்தது. இதையொட்டி நடந்த பேஷன் ஷோவில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் மினுமினுக்கும் ஆடையில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
சிவப்பு நிற ஆடையை மேலாடையாக அணிந்து மேடையை சுற்றி ஒய்யாரமாக நடந்து வந்த சன்னி லியோன் திடீரென மேலாடையை கழட்டி எறிந்தார். தொடர்ந்து வெள்ளி நிற மினு மினுக்கும் ஆடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை பறக்க விட்டார்.
முன்னதாக அவரது கணவர் டேனியல் வேபருடன் உதட்டு முத்தம் கொடுத்து புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்து அசத்தினார் சன்னி லியோன்.