மூன்றாவது முறையாக இணையும் ரஜினி-நெல்சன்?

ரஜினியும் நெல்சனும் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-10-12 09:01 IST

சென்னை,

ரஜினிகாந்த் தற்போது தனது பிளாக்பஸ்டர் படமான ஜெயிலரின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியும் நெல்சனும் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்திடம் நெல்சன் ஒரு ஸ்கிரிப்டை கூறியதாகவும் ரஜினியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி, கமல்ஹாசனுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தை முடித்ததும், நெல்சன் ஜூனியர் என்டிஆருடன் தனது படத்தை முடித்ததும் ரஜினி-நெல்சன் படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்