''தம்முடு'' - நடிகை சப்தமி கவுடாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜூலை 4-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-09 02:04 IST

சென்னை,

நடிகர் நிதின் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த படம் ''தம்முடு''. ஜூலை 4-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேணு ஸ்ரீராம் இயக்கும் இப்படத்தில் சப்தமி கவுடா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரமான ரத்னாவின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா மற்றும் சவுரப் சச்தேவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்