''மிராய்'' - படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்...பகிர்ந்த ஹீரோயின்

''மிராய்'' படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது;

Update:2025-09-10 23:30 IST

சென்னை,

நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரித்திகா சில விஷயங்களை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், '' இந்தப் படத்திற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். படப்பிடிப்பின்போது தேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் ஒய்வெடுக்காமல் படப்பிடிப்புக்கு வந்தார். தேஜாவிடமிருந்து நிறைய கற்றுக்கொடேன். அவரது அர்ப்பணிப்பு பார்க்க மிகவும் ஊக்கமளிக்கிறது. அதனால்தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை நாங்கள் பல பகுதிகளில் படமாக்கினோம். 80 சதவீத படப்பிடிப்பை வெவ்வேறு இடங்களில்தான்  படமாக்கினோம். நீங்கள் அதை திரையரங்குகளில் பார்ப்பீர்கள். இந்தப் படம் மற்ற படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது'' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்