தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
நடிகர் மோகன் பாபு ஏற்கனவே மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.;
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவரது மகன் மஞ்சு மனோஜ். சமீபத்தில் நடிகர் மோகன் பாபு, மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மனோஜ், மோகன் பாபு மீது புகார் அளித்துள்ளார். காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மனோஜ் புகார் அளித்திருக்கிறார். காயங்களுடன் சென்றதால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்து தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது முற்றி கைகலப்பான நிலையில், மனோஜ் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறுவதால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.