தெலுங்கில் அறிமுகமாகும் ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' பட நடிகை

இப்படம் வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-08-16 16:04 IST

சென்னை,

கடந்த ஆண்டு ''பருவு'' மற்றும் ''விகடகவி'' போன்ற ஓடிடி வெப் தொடர்களில் நடித்த நரேஷ் அகஸ்தியா, தற்போது காதல் படமான ''மேகலு செப்பின பிரேம கதா''வில் நடித்துள்ளார்.

வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், தனுஷ் இயக்கிய ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' படத்தில் நடித்த ரபியா கத்தூன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் வெங்கடேஷ் ககுமனு, ஹர்ஷ வர்தன், துளசி, ஆமணி, பிரின்ஸ் ராம வர்மா, ராஜா செம்போலு, மோகன் ராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்