தனது அடுத்த படங்கள்...பகிர்ந்த ராசி கன்னா
ராசி கன்னா தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார்.;
சென்னை,
பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் காதல் படமான தெலுசு கடா மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீசுக்கு முன்னதாக, ராசி கன்னா ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார். அவர் கூறுகையில்,
நான் பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. மேலும், பாலிவுட்டில் நான்கு படங்களில் நடிக்கிறேன்’ என்றார்.