அந்த நிகழ்ச்சியால் என் சினிமா வாழ்க்கையே நாசமாகி விட்டது- புலம்பும் நடிகை
நடிகை தேஜஸ்வி மடிவாடா அந்த நிகழ்ச்சியால் தன் சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.;
தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை தேஜஸ்வி மடிவாடா, அந்த நிகழ்ச்சியால் தன் சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ‘சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லி சிட்டு', ‘ஐஸ் கிரீம்', ‘கெரிந்தா' போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. தமிழில் ‘நாட்பதிகாரம்' என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தெலுங்கு ‘பிக்பாஸ்' 2-வது சீசனில் பங்கேற்றார். கவர்ச்சியிலும் கலக்கினார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எதிர்பார்த்தபடி இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேஜஸ்வி மடிவாடா கொந்தளிப்புடன் கூறும்போது, ‘‘அந்த நிகழ்ச்சியில் என்னை தவறாக காட்டிவிட்டார்கள். இதனால் எனக்கு படவாய்ப்புகள் தரவே யோசிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி என் சினிமா வாழ்க்கையே நாசமாக்கி விட்டது'' என்று குறிப்பிட்டார்.