விராட் கோலியின் பயோபிக்கை இயக்க மறுத்த இயக்குனர்...ஏன் தெரியுமா?

விராட் கோலிக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.;

Update:2025-09-17 13:25 IST

மும்பை,

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது.

இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால அதை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் கூறுகையில், ''விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்க விரும்பவில்லை. ஏனெனில் பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஒரு ஹீரோவாக உள்ளார். ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமெனில் நான் வேறொருவரைதான் தேர்வு செய்ய வேண்டும். கோலி மிகவும் அழகானவர் மற்றும் அற்புதமான மனிதர்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்