“தலைவன் தலைவி” படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு

விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை நிறைவு செய்துள்ளது.;

Update:2025-08-18 14:39 IST

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. 'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 25-வது நாளை நிறைவு செய்துள்ளது. 

கடந்த மாதம் 25-ந்தேதி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன், மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றி விழாவை படக் குழுவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ‘தலைவன் தலைவி’ படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்