'கிஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

'கிஸ்' படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.;

Update:2025-05-01 06:27 IST

சென்னை,

படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான 'லிப்ட், டாடா' திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.

இந்தநிலையில் தற்போது நடிகர் கவின் 'கிஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்குகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது பர்ஸ்ட் சிங்கிளான 'திருடி...' என்ற பாடல் வெளியாகி உள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்