'கதையில்தான் கவனம் செலுத்த வேண்டும், அதில் அல்ல..'- கவுதம் மேனன்

முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் கவுதம் மேனன்;

Update:2025-01-22 07:53 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் கவுதம் மேனன். இவர் தற்போது நடிகர் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது இவரது முதல் மலையாள படமாகும். இப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றின் கவுதம் மேனன் பேசுகையில்,

'திரைப்படம் எடுக்க பெரிய பட்ஜெட்டெல்லாம் தேவையில்லை. நல்ல கதை இருந்தாலே போதும். ரூ.100 கோடி செலவில் ஒரு படம் தயாரிப்பதற்கு பதிலாக ரூ.10 கோடி பட்ஜெட்டில் 10 படங்கள் தயாரிக்கலாம். அதனால், பட்ஜெட்டில் கவனம் செலுத்தாமல், கதையில் செலுத்த வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்