’தி ராஜா சாப்’: இந்த தேதியில் வெளியாகும் முதல் பாடல்?
இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், தனது அடுத்த படமான தி ராஜா சாப் படத்திற்கான படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல் பிரபாஸின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப் பாடல் வருகிற 24 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது.