நிலைமை மோசமாகி வருகிறது...டெல்லி காற்று மாசு குறித்து கிரித்தி சனோன் கவலை

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு கிரித்தி சனோன் பதிலளித்தார்.;

Update:2025-11-26 10:17 IST

சென்னை,

கிரித்தி சனோன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக தேரே இஷ்க் மே படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28 -ம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் தடுக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையெனில், நாம் அருகருகே நின்றாலும், புகை மற்றும் தூசி காரணமாக ஒருவரையொருவர் பார்க்க முடியாது," என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்