“கொஞ்சநாள் பொறு தலைவா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமெடி கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.;

Update:2025-11-26 04:11 IST

சென்னை,

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள் படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. காமெடி கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தினை ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.முருகன் தயாரித்துள்ளார்.

இதில், நடிகை சுதா, சாந்தி, வைகுண்டம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “கொஞ்ச நாள் பொறு தலைவா” படம் வருகிற டிசம்பர் 5ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்