இணையத்தில் வேகமாக பரவும் ஹன்சிகா பகிர்ந்த வீடியோ

ஹன்சிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.;

Update:2025-10-27 10:49 IST

சென்னை,

ராஜஸ்தானின் ரந்தம்போர் (Ranthambore) தேசியப் பூங்காவில் ஜாலியாக பொழுதுபோக்கிய வீடியோவை நடிகை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஹன்சிகாவிற்கு 2022ஆம் ஆண்டு திருமணமான நிலையில், தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகா தனியாக தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், ரந்தம்போர் தேசியப் பூங்காவுக்கு அவரது அம்மா, சகோதரர் உடன் சென்ற ஹன்சிகா, அங்கு புலி, கரடி, மான் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்ததை வீடியோவாக பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்