'துரந்தர்' பட இயக்குனரின் மனைவி ஒரு பிரபல நடிகை - யார் அவர் தெரியுமா?

கடந்த 5-ம் தேதி வெளியான 'துரந்தர்' படம் தற்போது ரூ.500 கோடியை நெருங்கி வருகிறது.;

Update:2025-12-16 23:16 IST

சென்னை,

ரன்வீர் சிங்கின் சமீபத்திய படம் துரந்தர். இந்தப் படம், தற்போது பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து வருகிறது. கடந்த 5-ம் தேதி வெளியான இந்த ஸ்பை ஆக்‌சன் படம் தற்போது ரூ.500 கோடியை நெருங்கி வருகிறது.

இந்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?, அவர்தான் ஆதித்யா தர். பலருக்கு இந்தப் பெயர் தெரியாது.. ஆனால்.. ஆதித்யா சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (2019) உரி என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது திறமையின் அடையாளமாக, அவர் தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அதன் பின் ஆதித்யா தர் நீண்ட இடைவெளிக்கு பிறகு துரந்தர் படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி ஒரு பிரபல நடிகை. அவர் பாலிவுட்டில் ஒரு நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை யாமி கவுதம்தான்.

ஆதித்யா தரின் முதல் படமான உரியில் யாமி கவுதம் முக்கிய வேடத்தில் நடித்தார். அப்போதுதான் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, இந்த தம்பதியருக்கு வேதவித் தார் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

யாமி கவுதம் தமிழில் "தமிழ்செல்வனும் தனியர் அஞ்சலும்" என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெய் உடன் நடித்த இந்த படம் 2016-ல் வெளியானது



 


Tags:    

மேலும் செய்திகள்