அழகுக்காக அறுவை சிகிச்சை செய்தாரா நடிகை ரகுல் பிரீத் சிங் ? - வைரலாகும் வீடியோ

பரவி வந்த வீடியோவுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதிலளித்துள்ளார்.;

Update:2025-12-16 23:50 IST

சென்னை,

சமூக ஊடகத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு பிரபலத்தைப் பற்றிய செய்திகள் வைரலாகின்றன. தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங்கின் பெயர் வைரலாகி வருகிறது. ரகுல் பிரீத் சிங்கின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில், நடிகை ரகுல் பிரீத் சிங் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக ஒரு மருத்துவர் கூறினார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நடிகைக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பரவி வந்த இந்த வீடியோவுக்கு நடிகை பதிலளித்துள்ளார்.

இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக பரவிய செய்தி பொய்யானது என்றும், அந்த தகவல்களை மறுத்துள்ளார். சிலர் தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் இத்தகைய பதிவுகளைப் பார்க்கும்போது சில சமயம் பயமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் அதை குறை சொல்ல முடியாது என்றும் கூறினார். உடல் எடையை குறைப்பது உடற்பயிற்சியின் மூலம் சாத்தியம் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்றும் ராகுல் பிரீத் சிங் அறிவுறுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்