அகிலின் 'லெனின்' படத்தில் நுழையும் பாலிவுட் நடிகை?
இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பாலிவுட் நடிகை நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.;
சென்னை,
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.
கிஷோர் அப்புரு இயக்கத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீலீலா முதலில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அவர் விலகியதாகவும் அவருக்கு பதிலாக பாக்யஸ்ரீ போர்ஸ் இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'லெனின்' பற்றிய ஒரு புதிய தகவல் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலுடன் அவர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது.
அனன்யாவின் கவர்ச்சியும் நடனமும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதால், அகில்-அனன்யா ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.