''சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது'' - விஜய் ஆண்டனி பரபரப்பு பேட்டி

விஜய் ஆண்டனி தற்போது ''மார்கன்'' படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-06-25 08:09 IST

மதுரை,

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளதாக விஜய் ஆண்டனி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்படத்தின் புரமோஷன் நேற்று மதுரையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கு பிறகு விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, " போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாகவே உள்ளது. இந்த கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம்'' என்றார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்