’என்னை சதி பண்ணி வெளிய அனுப்பிட்டாங்க...’- பிக்பாஸ் நந்தினி பரபரப்பு பேட்டி

நந்தினியின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2026-01-06 11:02 IST

சென்னை,

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4 நாட்களில் வெளியேறிய நந்தினி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில்,

``பிக்பாஸில் கலந்துகிட்டதுக்காக வெட்கப்படுறேன். என்னைய சதி பண்ணி வெளிய அனுப்பிட்டாங்க. இன்னைக்கு பார்வதி, கம்ருதீன் வாழ்க்கை வீணா போய்டுச்சு. எல்லாமே கட் பண்ணி போடுறாங்க. அது ரியாலிட்டி ஷோவே இல்ல. அதனால தான் நான் கெத்தா வெளிய வந்தேன்.

விஜய் சேதுபதி போட்டியாளர்கள மதிக்கிறதே இல்ல. அவமதிக்கிறாரு. கமல் சார் இருந்த வர அவர் நல்லா கொண்டு போனாரு. ஆனா இவரு சரியில்ல. பேசாம இவரே உள்ள போய் போட்டியாளரா விளையாடலாம். ’’ என்றார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்