‘விஜய்யின் பெரிய ரசிகை நான்’ - குஷ்பு பேட்டி

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ என்று சொன்னதில் தனக்கு வருத்தம்தான் என குஷ்பு கூறியுள்ளார்.;

Update:2026-01-06 01:49 IST

சென்னை,

சென்னையில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;-

“விஜய்யை சக நடிகர் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனக்கு தம்பி போன்றவர் அவர். அவரை தம்பி என்றுதான் சொல்வேன். அவரும் அக்கா என்றுதான் என்னை அழைப்பார். அவர் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கியதால், சினிமாவை விட்டு விலகப்போவதாக கூறியுள்ளார்.

‘ஜனநாயகன்’ அவரது கடைசி படம் என்று சொன்னதில் எனக்கு வருத்தம்தான். விஜய்யின் பெரிய ரசிகை நான். அவருடைய நடனம், ஆக்‌ஷன் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கடைசி படம் இது என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், ஒரு புதிய பயணத்தை அவர் தொடங்கி இருக்கிறார். அதற்கு அவருக்கு வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்