பணம் கொடுத்து என்னை டிரோல் செய்ய வைக்கின்றனர் - நடிகை ஊர்வசி ரவுத்தேலா

என்னை டிரோல் செய்வதால் என் புகழை மங்கச் செய்ய முடியாது என ஊர்வசி ரவுத்தேலா தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-28 20:37 IST

'லெஜெண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஊர்வசி ரவுத்தேலா. இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியில் வெளியான 'டாக்குமகராஜ்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா பின்புறம் பாலகிருஷ்ணா தபேலா வாசித்தபடி நடனம் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் பிரான்சில் நடந்த கேன்ஸ் விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா எனக்கு எதிராக டிரோல் செய்ய பணம் கொடுக்கப் படுவதாக குற்றச்சாட்டுகள் கூறி உள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், உலகமெங்கும் உள்ள எனது ரசிகர்களுக்கும் கேன்ஸ் விழா குழுவினர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது, எனது புகழை மங்கச் செய்யும் வகையில் பணம் கொடுத்து எனக்கு எதிராக டிரோல் செய்ய வைக்கின்றனர். இதனால் என் புகழை மங்க செய்ய முடியாது. மற்றவர்களை போல நான் உங்களுக்கு பணம் செலுத்த மாட்டேன். இடைவிடாத அர்ப்பணிப்பு, சர்வதேச அளவில் பாராட்டு மூலம் உருவாக்கப்பட்டுள்ள எனது கவர்ச்சி தீண்டத் தகாததாகவே உள்ளது என உடைக்க முடியாத உறுதியுடன் ஊர்வசி ரவுத்தேலா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்