விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை - நடிகர் கார்த்தி

உழவன் பவுண்டேஷன் நடத்திய ‘உழவர் விருதுகள் 2026’ விழாவில் நடிகர் கார்த்தி விவசாயிகளை கவுரவப்படுத்தியுள்ளார்.;

Update:2026-01-18 15:02 IST

சென்னை,

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்குப் பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் வகையில் நடிகர் கார்த்தி, உழவன் பவுண்டேஷனை நடத்தி வருகிறார். இதன் ‘உழவர் விருதுகள் 2026’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகு​மார், ரவி மோகன், ரேவ​தி, கருணாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த விவ​சாயி விருது கோவில் பட்​டியைச் சேர்ந்த பழனியம்​மாளுக்​கும், சிறந்த வேளாண் பங்​களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயனுக்​கும், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்​கள் நலச்​சந்​தைக்​கும் , நீர்நிலைகள் மீட்​டெடுத்​தலுக்​கான சிறந்த பங்​களிப்பு விருது திருப்​பூர் ‘வேர்​கள்’ அமைப்​புக்​கும், சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கான விருது, குன்​னூரைச் சேர்ந்த ‘கி​ளீன் குன்னூர்’ அமைப்​பு​களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. விருது பெற்றவர்களுக்கு சான்​றிதழ், கேட​யம் மற்​றும் ரூ.2 லட்​சம் மதிப்​பிலான காசோலை வழங்​கப்​பட்​டன.

விழா​வில் பேசிய கார்த்​தி “விவ​சா​யிகளை இந்​த சமூகம் பெரிதாகக் கவனிப்​ப​தில்​லை; அவர்​களை முறை​யாக அங்கீகரிப்பதில்லை. அவர்​களுக்​கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு​கிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்​டும் ஒரு​போதும் நின்றுவிடவில்​லை. எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் விவசாயிகளுக்​காக​வும், விவ​சா​யத்​துக் காக​வும் அர்ப்பணிப்​புடன் செயல்​படு​பவர்​களை கொண்​டாட வேண்​டும்; இந்த சமூகத்​துக்கு அவர்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும் என்​ப​தற்காகவே, தொடர்ந்து இந்த உழவர் விருதுகளை வழங்கி வருகிறோம்” என்றார்​.

Tags:    

மேலும் செய்திகள்