"யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை" - விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பதிலளித்துள்ளார்.;

Update:2026-01-18 12:23 IST

சென்னை,

இந்தி திரைப்படத் துறையில் ‘சமூகப் பாகுபாடு’ தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விமர்சனங்களுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பதிலளித்துள்ளார். வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் அவர் “அன்புள்ள நண்பர்களே, இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே எனது வீடு, எனது ஆசிரியர் மற்றும் எனது உந்துகோலாக இருக்கிறது.

சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என் நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்