’வெறுப்பு உங்கள் கண்களை மறைத்தது’ - ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து
ஏ.ஆர்.ரகுமானை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை சந்தித்ததில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
'சாவா' திரைப்படம் பிரிவினையை ஏற்படுத்தும் படம் என ஏ.ஆர். ரகுமான் கூறியதற்கு நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள பதிவில்,
’அன்புள்ள ரகுமான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும், நிறைய பாரபட்சத்தையும் எதிர்கொள்கிறேன்
ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. நான் இயக்கிய ’எமர்ஜென்சி’ கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால் கதை கேட்பதை விடுங்கள், என்னை சந்திக்க கூட நீங்கள் மறுத்தீர்கள்.
பிரசார திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது ஆனால், எமர்ஜென்சிஒரு தலைசிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள்.
இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது; உங்களுக்காக நான் வருந்துகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.