முன்பு ’பிசியோதெரபிஸ்ட்’...இப்போது டிரெண்டிங் ’ஹீரோயின்’...யார் அவர் தெரியுமா?

2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை போட தொடங்கினார்.;

Update:2026-01-18 10:04 IST

சென்னை,

இன்றைய திரைப்பட நட்சத்திரங்களில் பலர் முன்பு பல்வேறு வகையான பணிகளில் இருந்துள்ளனர். அவர்கள் மருத்துவராகவும், பொறியாளராகவும், வங்கியிலும் பணியாற்றியுள்ளனர். இருப்பினும், நடிப்பின் மீதான ஆர்வத்தால், அந்த வேலைகளை விட்டுவிட்டு, சினிமா துறையில் நுழைந்தனர்.

இப்போது நாம் பேசப் போகும் நடிகையும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான். திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு பிசியோதெரபிஸ்டாக பணியாற்றினார். சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த அவர், மருத்துவப் படிப்பை முடித்தார்.

அதன் பிறகு, அவர் ஒரு பிசியோதெரபிஸ்டாக பணியாற்றினார். இருப்பினும், 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை போட தொடங்கினார். இதற்கு வரவேற்பு கிடைக்க பலர் படங்களில் நடிக்க முயற்சிக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.

அப்படித்தான் அவர் திரைப்பட ஆடிசன்களில் கலந்து கொண்டு, தற்போது நடிகையாகி இருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?. அவர் வேறு யாறும் இல்லை ’சாக்சி வைத்யா’தான்.

மகாராஷ்டிராவின் தானேயில் 2000-ம் ஆண்டு ஜூன் 19 அன்று பிறந்த சாக்சி வைத்யா, தெலுங்கில் அகில் அக்கினேனி ஹீரோவாக நடித்த ’ஏஜென்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு, வருண் தேஜுடன் ’காந்திவதரி அர்ஜுனா’ படத்தில் நடித்தார். இந்தப் படமும் தோல்வியடைந்தது.

இருப்பினும், இறுதியாக இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான ’நாரி நாரி நடுமு முராரி’ படம் சூப்பர் ஹிட்டானது. ஷர்வானந்த் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், சாக்சி வைத்யா, சம்யுக்தா மேனனுடன் மற்றொரு கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இவரது பெயர் டிரெண்டாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்