கெனிசாவுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.;
சென்னை,
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். சமீபத்தில் திரைக்கு வந்த 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கலைவையான விமசனங்களை பெற்று வருகிறது.
அடுத்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பிரபல பாடகி கெனிஷா இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வந்த அவர்கள், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர். அவர்களின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் நடிகர் ரவி மோகனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.