’இது தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்து’ - நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் ஏஐ வீடியோக்கள் குறித்து கருத்து பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பின் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல் பேட்மிண்டன், பார்முலா ஒன் கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இவர், போட்டிகளிலும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஏஐ வீடியோக்கள் குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
’அபத்தமான ஏஐ வீடியோக்கள் உண்மை போல் காட்சி அளிக்கும் போக்கு மிகவும் மோசமானது, இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தாகிவிடும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.