வாழ்த்து மழையில் ’டைட்டானிக்’ பட ஹீரோயின்

டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில் 1997-ல் ரிலீசான படம் டைட்டானிக்.;

Update:2025-10-06 15:06 IST

சென்னை,

டைட்டானிக் பட ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் தன்னோட 50வது பிறந்த நாளை கொண்டாடினார். கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில் 1997-ல் ரிலீசான படம் டைட்டானிக்.

அதில் ரோசாக நடித்த கேட்டை உலகமே கொண்டாடியது. ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, எம்மி விருது, பாப்டா விருது என்று வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அபாரமான நடிகை கேட்.

அவர் தற்போது வயதில் அரைசதம் கடந்திருக்கிறார். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்துகொண்டு இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்