'சூர்யா 45' படத்தில் வக்கீலாக நடிக்கும் திரிஷா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;

Update:2024-12-05 19:18 IST

கோவை,

தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45 ' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடி யாரும் இல்லை எனவும் நடிகை திரிஷா இப்படத்தில் வக்கீலாக நடிக்கிறார் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிமேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்