"வீர தீர சூரன்" பட தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-03-15 15:54 IST

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின.தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் படத்தைப் பார்த்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் "மிகவும் மகிழ்ச்சியான தருணம். படத்தை தணிக்கைக்கு அனுப்பும்முன் எங்களுக்கு கியூப் திரையரங்கில் இந்த அற்புதமான படத்தை எங்களுக்குக் காட்டிய மிகவும் திறமையான இயக்குநர் சு.அருண்குமாருக்கு நன்றி. விக்ரமிடமிருந்து மிகவும் எதார்த்தமான, கல்ட்-கமர்ஷியல். இது விக்ரமின் சிறந்த படங்களில் ஒன்று. வரும் 27ம் தேதி முதல் ரசிகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்