விஜய் ஆண்டனியின் 'லாயர்' படப்பிடிப்பு பணி தொடக்கம்

ஜோஷுவா சேதுராமன் இயக்கும் 'லாயர்' படத்தில் நடிகை ரவீனா டாண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.;

Update:2025-06-10 13:49 IST

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது முழுநேர நடிகராகி விட்டார். இவர் தற்போது தன் கைவசத்தில் 'ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன்' ஆகிய படங்களை வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து தனது 26-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'லாயர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை 'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், லாயர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி உள்ளன. படத்தின் பர்ஸ்ட் ஷாட்டை படக்குழு வீடியோ எடுத்து வெளியீட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்