'நான் ராஜாவாக இருந்திருந்தால், அவரைக் கடத்தி என் அரண்மனையில் வைத்திருப்பேன்' - விஜய் தேவரகொண்டா

அனிருத்துடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாகக் காத்திருந்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.;

Update:2025-05-16 07:04 IST

ஐதராபாத்,

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனிருத்துடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாகக் காத்திருந்ததாக தெரிவித்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை 4-ம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அனிருத்துடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாகக் காத்திருந்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார். அவர் கூறுகையில்,

"விஐபி மற்றும் 3 படங்களைப் பார்த்தபோது, அனிருத் மீது எனக்கு அன்பு உருவானது. யார் இந்த மேதை ? அவர் சாதாரணமான ஒருவர் இல்லை என்பதுபோல் இருந்தது. அப்போது, நான் நடிகராகவில்லை.

ஆனால், நான் எப்போதாவது ஒரு நடிகராக மாறினால், இவர்தான் என் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று தோன்றியது.

நான் ஒரு ராஜாவா இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து அரண்மனையில் வைத்து என் படங்களுக்கு மட்டும் இசையமைக்க செய்திருப்பேன். அனிருத்துடன் இணைந்து பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்தேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்