"96" இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை.. ஹீரோ மாற்றம்!
96 படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.;
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ராம்-ஜானு இந்த இரண்டு பெயர்களும் ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார் 96 இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் பாகத்திற்கான கதை என்பது ஜானுவை தேடி ராம் சிங்கப்பூர் செல்வதுதான் என்று கூறப்படுகிறது. பிரேம்குமார் இதை விஜய் சேதுபதியிடம் விவரித்தபோது அவர், இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லையாம். எனவே பிரேம்குமார், விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.