'கிராமத்து மார்ட்டின் ஸ்கார்செஸி படம் 'வீர தீர சூரன்' ' - எஸ்.ஜே.சூர்யா

இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது;

Update:2025-03-19 07:45 IST

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும்நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணலில் பேசியுள்ளனர்.

அதில் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், 'வீர தீர சூரன் படத்தில் நடிகர் விக்ரம் சாரை தூள் படத்தில் பார்த்தமாதிரி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் பார்க்கப்போகிறீர்கள். இயக்குனர் அருண்குமார் தீவிரமான மார்ட்டின் ஸ்கார்செஸி ரசிகர். மார்ட்டின் ஸ்கார்செஸி கிராமத்தில் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்