விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் “நான் எங்கே” பாடல் வெளியானது

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் இன்று வெளியானது.;

Update:2025-10-31 21:32 IST

சென்னை,

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ஆர்யன்’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. ‘கொல்லாதே கொள்ளை அழகாலே’ பாடலை வாமனா வரிகளில் ஜிப்ரான், குரு ஹரிராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். ‘ஆர்யன்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘ஆர்யன்’ திரைப்படம் வெளியாக 6 நாட்களே உள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், ‘ஆர்யன்’ படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நான் எங்கே’ பாடலை செல்வமிரா வரிகளில் ஜிப்ரான், யாசின் நிசார், பிரித்தா ஆகியோர் பாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்