“அந்த கலாசாரம் நமக்கு இல்லை” - ஜான்வி கபூர்
பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பற்றிய ஜான்வி கபூரின் வார்த்தைகள் கவனம் ஈர்த்துள்ளது.;
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இதற்கிடையில், பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பற்றிய அவரது வார்த்தைகள் கவனம் ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், 'இந்திய கலாசாரத்தில், வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் பொறுப்பு. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, அவர்கள் நம் குழந்தைகளாகிறார்கள். அன்பைப் பரப்புங்கள்.
நம்மளுடையது மேற்கத்திய கலாச்சாரம்(western culture) அல்ல...விட்டுவிட்டுப் போவதற்கு..சிறுவயதிலிருந்தே பொறுப்புகளை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், இல்லையா?' என்றார். ஜான்வி கபூரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.