’அந்த ஹீரோ படத்தை தவறவிட்டேன்...ஏன்னு சொன்னா சர்ச்சையாகும்’ - நடிகை ரேணு தேசாய்

திருமணத்திற்குப் பிறகு ரேணு தேசாய் படங்களில் இருந்து விலகி இருந்தார்.;

Update:2026-01-18 07:39 IST

சென்னை,

பிரபல நடிகை ரேணு தேசாய். இவர் நடிகர் பவன் கல்யாணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பிறகு, ரேணு தேசாய் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பிள்ளைகளை கவனித்துக் கொண்டு வருகிறார். பவன் கல்யாண் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் ஆந்திராவின் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு ரேணு தேசாய் படங்களில் இருந்து விலகி இருந்தார். கிட்டத்தட்ட 20 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ’டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். இதற்கிடையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இவர் சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "மகேஷ் பாபுவின் ’சர்காரு வாரி பாட்டா’வில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க படக்குழு என்னை அணுகியது. அந்த வேடத்தில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்தக் காரணங்களை இப்போது சொன்னால் தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்" என்றார். தற்போது, ரேணு தேசாயின் கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த காரணம் என்னவாக இருக்கும் என்று மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்