சந்தீப் ரெட்டி வங்காவின் ''ஸ்பிரிட்'' - பிரபாஸ் இணைவது எப்போது?

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்கிறார்.;

Update:2025-07-04 14:45 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ''ஸ்பிரிட்'', ஏனெனில் சந்தீப் ரெட்டி வாங்கா முதல் முறையாக பிரபாஸுடன் இணைந்துள்ளார்.

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நீண்ட காலமாக நடந்து வரும்நிலையில், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரர் பிரணய் வங்கா, ''ஸ்பிரிட்'' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று ஒரு நிகழ்வில் தெரிவித்திருக்கிறார்

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

பிரபாஸ் தற்போது மாருதியின் ''தி ராஜா சாப்'' மற்றும் ஹனு ராகவபுடியின் ''பௌஜி'' படப்பிடிப்பை முடிப்பதில் மும்முரமாக உள்ளார். அதன்பின், ''ஸ்பிரிட்'' படப்பிடிப்பில் பிரபாஸ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்