படங்கள் நடிக்க இடைவெளி ஏன்? - திவ்யபாரதி சுவாரஸ்ய பதில்
எனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று நடிகை திவ்யபாரதி கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் நீளமான கூந்தல் கொண்ட அழகியாக வலம் வரும் திவ்யபாரதி, ‘பேச்சுலர்' படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். ‘மகாராஜா', ‘கிங்ஸ்டன்' படங்களிலும் நடித்துள்ளார்.
இணையத்தில் கவர்ச்சி படங்களை கசியவிட்டு, இளசுகளின் உள்ளங்களை சிதறடித்து வரும் திவ்யபாரதி, அடுத்து என்ன படம் நடிக்கப்போகிறார்? என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பேச்சுசுலர்' படத்துக்கு பிறகு நடிக்கும் படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன். எனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வாய்ப்புகள் நிறைய வந்துகொண்டு தான் இருக்கிறது. நான் தான் யோசிக்கிறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும், என்றார்.