''அவர் தெலுங்கு சினிமாவின் பெருமை'' - சிரஞ்சீவி
சிரஞ்சீவி, வசிஷ்டா இயக்கத்தில் ''விஸ்வம்பரா'' வில் நடித்துள்ளார்.;
சென்னை,
இன்று தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் ஒருவர். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''என் அன்பான மகேஷ், 50-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். தெலுங்கு சினிமாவின் பெருமை நீங்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் இளமையாகி கொண்டே வருகிறீர்கள். இது அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மகேஷ் பாபு அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலியின் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சிரஞ்சீவி, வசிஷ்டா இயக்கத்தில் ''விஸ்வம்பரா''வில் நடித்துள்ளார்.