போலீசாரை கொல்ல துடிக்கும் சைக்கோ...பின்னணியில் திடுக்கிடும் தகவல்; கிரைம் திரில்லரை எதில் பார்க்கலாம்?
இந்த திரில்லர் படம் ஐஎம்டிபி-ல் 7.2 புள்ளியை பெற்றுள்ளது.;
சென்னை,
வழக்கம் போல், இந்த வெள்ளிக்கிழமையும் (அக்டோபர் 17) பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இருப்பினும், நேற்று ஒரு படம் வந்துள்ளது. அதுவும் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், மிதமான வெற்றியைப் பெற்றது. அதர்வா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். லாவண்யா திரிபாதி மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் தாயான பிறகு வெளியான முதல் படம் இது. ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த திரில்லர் படம் ஐஎம்டிபி-ல் 7.2 புள்ளியை பெற்றுள்ளது.
புதிதாக போலீஸ் பணிக்கு சேர்ந்த அதர்வா உள்பட 6 பேர், உயர் அதிகாரியின் கட்டளையை ஏற்று 'ரவுண்ட்ஸ்' செல்கிறார்கள். அப்போது, பாதாள சாக்கடை மூடியை திறந்துகொண்டு 'ஹெல்மெட்' போட்ட ஆசாமி ஒருவர் வெளியே வந்து ஓடுவதை பார்க்கிறார்கள்.
அவனது நடவடிக்கையில் சந்தேக பொறிதட்ட, போலீசார் அவனை பின்தொடருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவன் காணாமல் போய்விட, போலீசார் திகைத்து போகிறார்கள். அப்போது அடியாட்களுடன் வரும் அஷ்வின் காக்குமனு, போலீசாரில் ஒருவரை வெட்டி சாய்க்கிறார். மற்றவர்களையும் தீர்த்துகட்ட துரத்துகிறார்.
அஷ்வின் யார்? போலீசாரை அவர் கொலை செய்ய துடிப்பது ஏன்? சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா அதை தடுக்க முடிந்ததா? இதன் பின்னணி தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
இந்த கிரைம் திரில்லர் படத்தின் பெயர் தணல். திரையரங்குகளில் மிதமாக ஓடிய இந்தப் படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.