ஓடிடியில் வெளியாகும் யுக்தி தரேஜாவின் காதல் திரைப்படம் ’கே-ராம்ப்’

இப்படம் ரூ .40 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-11-08 15:06 IST

சென்னை,

கிரண் அப்பாவரம் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த கே-ராம்ப் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் ஜெயின்ஸ் நானி இயக்கிய இப்படத்தில் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் ரூ . 40 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது

ஹாஸ்யா மூவிஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்டு ஆகியவற்றின் கீழ் ராஜேஷ் தண்டா மற்றும் ஷிவா பொம்மக்கு இணைந்து தயாரித்த இந்த காதல் நகைச்சுவை திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி முதல் ஆஹாவில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

இப்படத்தில் சாய் குமார், நரேஷ் விஜயகிருஷ்ணா, கம்னா ஜெத்மலானி, முரளிதர் கவுட், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைதன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்