ரூ.41 கோடி பட்ஜெட்...ரூ.210 கோடி வசூல்...55 விருதுகளை வென்ற உண்மை கதை...எதில் பார்க்கலாம்?
ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம்.;
சென்னை,
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அப்படி ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் அதன் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிக வசூலை பெற்றது. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்னும் பிரபலமாக உள்ளது.
படத்தின் பெயர் ''பாக் மில்கா பாக்''. 2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான இந்தப் படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கினார், பர்ஹான் அக்தர் முக்கிய வேடத்தில் நடித்தார்.இது பிரபல இந்திய ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த படம் ரூ. 41 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்தது. அது மட்டுமில்லாமல் 6 பிலிம்பேர் விருதுகள் உள்பட மொத்தம் 55 விருதுகளை வென்றது.
இந்தப் படத்தில் சோனம் கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியிலும் யூடியூப்பிலும் உள்ளது.