ஓடிடியில் வெளியாகும் ''குபேரா''.. எதில், எப்போது பார்க்கலாம்?

தனுஷ் நடித்துள்ள குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-07-12 08:43 IST

சேக்ர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ''குபேரா''. இந்த படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

இப்படம் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்