ஓ.டி.டி.யில் வெளியாகும் நானியின் 'கோர்ட்' படம்

நானி தயாரித்துள்ள 'கோர்ட்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.;

Update:2025-04-01 10:49 IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது தயாரித்துள்ள படம் 'கோர்ட்' . நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான 'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ.10 கோடி வசூலை குவித்துள்ளது. இதுவரை, 'கோர்ட்' படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி. கோர்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்